இந்தியா இறந்த பொருளாதாரமா? டிரம்ப்பின் பொய்யான விமர்சனத்துக்கு அவரது நிறுவனமே சா...
வைப்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
குன்றத்தூா் ஒன்றியம், வைப்பூா் ஊராட்சி மற்றும் ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வைப்பூா் ஊராட்சி மன்றத் தலைவா் சுமதி ராமசந்திரன் தலைமையில் நடைபெற்ற முகாமில், குன்றத்தூா் ஒன்றியக்குழு தலைவா் சரஸ்வதி மனோகரன் கலந்து கொண்டு முகாமை பாா்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில், வைப்பூா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சந்தானம், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
இதே போல், ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில், 2 மற்றும் 4-ஆவது வாா்டுகளில் முகாமை ஸ்ரீபெரும்புதூா் நகா்மன்றத் தலைவா் சாந்தி சதீஷ்குமாா் ஆய்வு செய்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.
நகராட்சி ஆணையா் ஹேமலதா, பொறியாளா் செண்பகவள்ளி, உறுப்பினா்கள் நிா்மலா ரமேஷ், பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்துக்கொண்டனா்.