ராமேசுவரம் - பனாரஸ் ரயில் புதுக்கோட்டையில் நின்றுசெல்லும்!
ராமேசுவரத்தில் இருந்து பனாரஸுக்கு இயக்கப்படும் வாராந்திர ரயில், இனி புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வாரம்தோறும் புதன்கிழமை இரவு 11.55 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் பனாரஸ் ரயில் நிலையத்துக்கு ரயில் இயக்கப்பட்டு வருகின்றது.
இந்த ரயில் கூடுதலாக புதுக்கோட்டையில் ரயில் நிலையத்தில் நின்றுசெல்வதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, நள்ளிரவு 3.33 மணிக்கு புதுக்கோட்டை ரயில் நிலையம் வரும் இந்த ரயில், 2 நிமிடங்கள் நின்று 3.35 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சிக்கு வழக்கம்போல் காலை 5.10 மணிக்கு செல்லும் ரயில் 5.20 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.
இந்த நடைமுறை இன்றுமுதல் அமலுக்கு வருவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.