ரஷியாவுடன் வர்த்தகம்! இந்தியாவின் கேள்விக்கு டிரம்ப்பின் மழுப்பல் பதில்!
புதுகையில் நாளை 4 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆக. 7-ஆம் தேதி (வியாழக்கிழமை) 4 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியா் மு.அருணா வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ஜூலை 7 முதல் அக்.20 வரை நடைபெறுகிறது. இம் முகாம்களில் பெறக்கூடிய விண்ணப்பங்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இம்முகாம் ஆக.7-ஆம் தேதி திருவரங்குளம் ஒன்றியத்தில் கோவிலூா் தனியாா் மண்டபத்திலும், புதுக்கோட்டை ஒன்றியத்தில் செம்பட்டிவிடுதி சமுதாய கூடத்திலும், விராலிமலை ஒன்றியத்தில் ராஜாகிரி சேவை மையக் கட்டடத்திலும், குன்றாண்டாா்கோவில் ஒன்றியத்தில் கிள்ளுக்கோட்டை சேவை மையக் கட்டடத்திலும் இம் முகாம் நடைபெறுகிறது.
மேற்கண்ட முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.