செய்திகள் :

ஐசிசி தரவரிசை: டாப் 5-ல் இடம்பிடித்த ஜெய்ஸ்வால்! கேப்டன் கில்லுக்கு சரிவு!

post image

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் தன்னுடைய வாழ்நாளின் சிறந்த தரநிலையை இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பிடித்து அசத்தியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய ஆண்டர்சன் - டெண்டுல்கர் தொடர் விறுவிறுப்பாக நடந்து முடிந்துவிட்டது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-2 என்ற கணக்கில் இரு அணிகளும் கோப்பைகளைப் பகிர்ந்து கொண்டனர்.

சிறந்த டெஸ்ட் தொடராகக் கருதப்படும் இந்தத் தொடரில் இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த நிலையில், வாரந்தோறும் புதன்கிழமை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் வெளியிடப்படும் ஐசிசி தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

இந்தப் பட்டியலில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக முன்னேற்றம் பெற்றுள்ளார். தொடரின் துவக்கத்தில் தொடர்ந்து சொதப்பி வந்தாலும் ஓவலில் நடைபெற்ற 5-வது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி 118 ரன்கள் விளாசி அசத்தினார். மொத்தமாக 5 போட்டிகளில் விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், 2 சதம், 2 அரைசதம் உள்பட 411 ரன்கள் குவித்து அசத்தினார். 

இதன்மூலம், 792 புள்ளிகள் பெற்று 3 இடங்கள் முன்னேறி தனது சிறந்த தரநிலையான 5 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஓவல் டெஸ்ட்டில் 2 இன்னிங்ஸ்கள் முறையே 21 மற்றும் 11 ரன்கள் எடுத்த இந்திய அணி கேப்டன் கில், 4 இடங்கள் குறைந்து 13 இடத்துக்கு சரிந்துள்ளார். மேலும், அவர் 754 புள்ளிகள் எடுத்துள்ளார்.

காயம் காரணமாக கடைசிப் போட்டியில் இருந்து விலகிய இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், ஒரு இடம் சரிந்து 8-வது இடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதலிடத்தில் தொடர்கிறார். மற்றொரு இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் பத்து இடங்களில்...

  1. ஜோ ரூட் - 908 புள்ளிகள்

  2. ஹாரி புரூக் - 868 புள்ளிகள்

  3. கேன் வில்லியம்சன் - 858 புள்ளிகள்

  4. ஸ்டீவ் ஸ்மித் - 816 புள்ளிகள்

  5. யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 792 புள்ளிகள்

  6. டெம்பா பவுமா - 790 புள்ளிகள்

  7. கமிந்து மெண்டிஸ் - 781 புள்ளிகள்

  8. ரிஷப் பந்த் - 768 புள்ளிகள்

  9. டேரில் மிட்செல் - 748 புள்ளிகள்

  10. பென் டக்கெட் - 747 புள்ளிகள்

Jaiswal Cracks ICC Test Batting Top 5

கவனக்குறைவாக விளையாடுவது பேஸ்பால் தத்துவமல்ல..! கிரேக் சேப்பல் விமர்சனம்!

ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் இங்கிலாந்தின் பேஸ்பால் கிரிக்கெட்டை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இந்திய அணி கடைசி போட்டியில் வென்று 2-2... மேலும் பார்க்க

ஆசியக் கோப்பைக்கு முன் டி20 அணிக்கு திரும்பும் ஷுப்மல் கில்! ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சனுக்கு சிக்கல்!

ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தியா - இங்கிலாந்துக்கு இடையிலான ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி தொடர் விறுவிறுப்பாக நடந்து... மேலும் பார்க்க

சிராஜுக்கு எதிராக விளையாடுவது சவாலானது: மொயின் அலி

இந்திய வேகப் பந்துவீச்சாளர் வீரர் சிராஜ் ஓவரில் விளையாடுவது எப்போதும் சவால் மிகுந்தது என முன்னாள் இங்கிலாந்து வீரர் மொயின் அலி தெரிவித்துள்ளார். ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இந்திய அணி கடைசி போட... மேலும் பார்க்க

ஐசிசி ஜூலை மாத விருதுக்கான போட்டியில் 3 கேப்டன்கள்! முச்சதம் விளாசிய முல்டருக்கு கிடைக்குமா?

ஐசிசியின் ஜூலை மாத விருதுக்கு இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.இந்தியா - இங்கிலாந்து இடையேயான ‘ஆண்டர்சன் - டெண்டுல்... மேலும் பார்க்க

கர்மா உங்களை உடனடியாகத் தாக்கும்... ஸ்டோக்ஸை விமர்சித்த அஸ்வின்!

இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் குறித்து அஸ்வின் “பேசுவதற்கு முன்பு யோசிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இந்திய அணி கடைசி போட்டியை வென்று 2-2 எனத் தொடரை சமன்படுத்தி... மேலும் பார்க்க

என்னைவிட ஜோ ரூட்டுதான் தொடர் நாயகன் விருதுக்குத் தகுதியானவர்: ஹாரி புரூக்

தொடர் நாயகன் சர்ச்சை குறித்து ஹாரி புரூக், “என்னைவிட ஜோ ரூட்டுக்குத்தான் இது மிகவும் பொருத்தமானது” எனக் கூறியுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்ற ‘ஆண்டா்சன் - டெண்டுல்கா் கோப்பை’ டெஸ்ட் கிரிக்கெட் தொடா், ப... மேலும் பார்க்க