ED: " நான் விளம்பரப்படுத்திய செயலி சட்டப்பூர்வமானது!" - விசாரணைக்குப் பிறகு விஜய் தேவரகொண்டா
ஆன்லைன் சூதாட்ட செயலிகளின் விளம்பரங்களில் நடித்ததாக விஜய் தேவரகொண்டா, ரானா டகுபதி, பிரகாஷ் ராஜ் உட்பட 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கின் விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை பலருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

அதில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை விசாரணைக்காக இன்று நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, விஜய் தேவரகொண்டா இன்று ஹைதராபாத்திலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
விசாரணை முடிந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விஜய் தேவரகொண்டா, "நான் ஒரு கேமிங் செயலியை விளம்பரப்படுத்தினேன்.
இது முற்றிலும் சட்டப்பூர்வமானது. சில அறிக்கைகளின்படி, இது பந்தய செயலி அல்ல. சட்டப்பூர்வமான மற்றும் சட்டவிரோத செயலிகளுக்கு இடையே உள்ள பெரிய வித்தியாசத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
என்னை அழைத்து விசாரணை செய்தனர்; நான் அவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தேன்.
செயலியைப் பற்றிய அனைத்து விவரங்கள், ஒப்பந்தம் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் ஆகியவற்றை அவர்கள் பெற்றுக்கொண்டனர்.

மேலும், நாங்கள் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்தோம். அவர்கள் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் மற்றும் இந்திய கிரிக்கெட் அணி, மகளிர் கிரிக்கெட் அணி, ஐ.பி.எல். போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் அணியையும் ஸ்பான்சர் செய்துள்ளனர்.
இத்தகைய ஸ்பான்சர்கள் சட்டப்பூர்வ நிறுவனங்களாக இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சில மாநிலங்களில் கேமிங் செயலிகள் அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் சில இடங்களில் அனுமதிக்கப்படுவதில்லை.
இருப்பினும், இது வீரர்களை மகிழ்விக்கும் சட்டப்பூர்வ கேமிங் செயலி ஆகும். பந்தய செயலிகள் சட்டவிரோதமானவை மற்றும் அவற்றைத் தவிர்க்க வேண்டும்," என்று பேசினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...