ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவிகிதமாக நீடிக்கும்: ரிசர்வ் வங்கி
ரூ. 22,000 தள்ளுபடியில் கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போன்! எங்கு, எப்படி பெறலாம்?
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 9 ஸ்மார்ட்போனுக்கு ரூ.22 ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடியினை இணைய விற்பனை தளமான ஃபிளிப்கார்ட்டில் பெறலாம்.
கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போன், ஆகஸ்ட் 20 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ள நிலையில், இதற்கு முந்தைய ஸ்மார்ட்போனான பிக்சல் 9, அதிரடி தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது.
கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகும்போது ரூ.79,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தள்ளுபடியால், ரூ.22,000 வரை வாடிக்கையாளர்கள் பலன் பெறலாம்.
சலுகை பெறுவது எப்படி?
பிரபல இணைய விற்பனை தளமான ஃபிளிப்கார்ட்டில் கூகுள் பிக்சல் 9 விலை ரூ. 64,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது நேரடியாகவே ரூ. 15,000 வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது கூகுள்.
இது தவிர, ஃபிளிப்கார்ட் இணைய தளமானது, ரூ. 7,000 வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. எச்.டி.எஃப்.சி. வங்கி கடன் அட்டை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் இதனைப் பெறலாம். இதனால், கூகுள் பிக்சல் 9 விலை ரூ. 57,999 ஆக குறையும். இதனால், வாடிக்கையாளர்கள் ரூ.22,000 வரை சேமிக்க முடியும்.
இதுமட்டுமின்றி, எச்.டி.எஃப்.சி. வங்கி கடன் அட்டை வைத்துள்ளவர்கள், வட்டி இல்லா தவணை முறையிலும் இந்த ஸ்மார்ட்போனை பெறலாம்.
கூடுதலாக சலுகைகளைப் பெற விரும்பினால், தங்களிடமுள்ள பழைய ஸ்மார்ட்போனை பரிமாற்றம் செய்துகொள்வதன் மூலம் ரூ. 50,150 ஆக விலையைக் குறைக்க முடியும்.
இதையும் படிக்க |ஆப்பிள் நிறுவனத்தில் கோடிகளில் வேலை வேண்டுமா? சம்பள விவரங்கள் இதோ..!