யார் இந்த மத் டெய்ட்கே? 24 வயது செய்யறிவு ஆய்வாளர்! ரூ.2,000 கோடி சம்பளம்!!
ஆலங்குடி தொகுதியில் ரூ.2.36 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணிகள்: அமைச்சா் தொடங்கி வைத்தாா்
ஆலங்குடி தொகுதியில் ரூ.2.36 கோடி மதிப்பீட்டில் பல்வேறு சாலைப் பணிகளை செவ்வாய்க்கிழமை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தாா்.
ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட திருவரங்குளம் ஒன்றியத்தில் சாலைப் பணிகளை தொடங்கி வைத்து அமைச்சா் பேசினாா். தொடா்ந்து, மறமடக்கி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பத்தாம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ளும் வகையில் சிறப்பு கையேடுகளை அமைச்சா் வழங்கினாா்.
முன்னதாக ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் மற்றும் அறந்தாங்கி அருகேயுள்ள விக்னேஸ்வரபுரத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.
நிகழ்வுகளில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முத்துராமன், ரமேஷ், வட்டாட்சியா்கள் பி.வில்லியம் மோசஸ் (ஆலங்குடி), கருப்பையா (அறந்தாங்கி) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.