``இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொள்வேன்'' - கல்லூரி செல்ல முடியாமல் தவித்த மாணவி; உதவிய பண்ட்
கர்நாடகாவில் நிதி நெருக்கடியால் உயர் கல்விக்கு செல்ல முடியாமல் தவித்து வந்த மாணவிக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் நிதி உதவி வழங்கி இருக்கிறார்.
கர்நாடகாவின் பகல்கோட் மாவட்டத்தில் ஜோதிகா என்ற மாணவி உயர்கல்வியில் Bachelor of Computer Applications (BCA) படிக்க ஆசைப்பட்டிருக்கிறார்.

ஆனால் குடும்பத்தில் நிலவிய நிதி நெருக்கடி காரணமாக அவர் உயர்கல்வியில் சேர முடியவில்லை.
இந்த செய்தி ரிஷப் பண்ட்டின் கவனத்திற்கு சென்றிருக்கிறது. இதனை தொடர்ந்து மாணவி ஜோதிகா உயர் கல்வியில் சேர ரூ.40 ஆயிரம் பணத்தை ரிஷப் பண்ட் அனுப்பி இருக்கிறார்.
தொடர்ந்து மாணவி ஜோதிகா ரிஷப் பண்டிற்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில், "நான் உயர்கல்வியில் BCA படிப்பைத் தொடர உதவி செய்த ரிஷப் பண்டிற்கு மிகவும் நன்றி கூறுகிறேன்.

மேலும் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன். நான் ஒரு மென்பொருள் பொறியாளராக விரும்புகிறேன், இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொள்வேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...