செய்திகள் :

யுபிஐ சாதனை! ஒரே நாளில் ரூ. 70.7 கோடி பணப்பரிவர்த்தனைகள்!

post image

இந்தியாவில் யுபிஐ மூலமாக ஒரேநாளில் 70.7 கோடி பணப்பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் யுபிஐ உள்ளிட்ட ஆன்லைன் பணப்பரிவர்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் புதிய சாதனையாக, கடந்த ஆக. 2 ஆம் தேதி இந்தியாவில் 70.7 கோடி பணப்பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இது போன்பே, கூகுள் பே, பேடிஎம், பிம், அமேசான் பே, யோனா எஸ்பிஐ போன்ற வங்கி செயலிகள் உள்ளிட்ட அனைத்து செயலிகளும் அடங்கும்.

கடந்த 2023-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது யுபிஐ பணப்பரிவர்த்தனை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. 2023ல் 35 கோடியாக இருந்த எண்ணிக்கை கடந்த 2024 ஆகஸ்டில் 50 கோடியாக அதிகரித்த நிலையில் தற்போது 70 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 65 கோடி பணப்பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. தற்போது 85% பணப்பரிவர்த்தனைகள் யுபிஐ மூலமாக நடைபெறுவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஒருநாள் யுபிஐ பணப்பரிவர்த்தனை 100 கோடியைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

UPI sets new record with over 700 million transactions in a single day

இதையும் படிக்க | காஸாவுக்கு அனுப்பப்படும் மனிதாபிமான உதவிகள் கொள்ளை போகின்றன! - ஐ.நா தகவல்

உத்தரகண்ட் மேகவெடிப்பு! 28 பேர் கொண்ட கேரள சுற்றுலாக் குழு மாயம்!

உத்தரகண்டில் மேகவெடிப்பினால் ஏற்பட்ட பேரிடரில், கேரளத்தைச் சேர்ந்த 28 பேர் கொண்ட சுற்றுலாக் குழுவொன்று மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகண்டில் மேகவெடிப்பினால், நேற்று (ஆக.5) மதியம் கீர் ... மேலும் பார்க்க

மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி! இன்று முழுவதும் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நாளை ஒத்திவைக்கப்பட்டன.ஜூலை 21 ஆம் தேதியில் தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பஹல்காம் தாக்குதல், ஆ... மேலும் பார்க்க

வீட்டுக்குள் வந்த கங்கை வெள்ளம்! பூஜை செய்த உ.பி. காவலர்கள்

உத்தரப்பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோரப் பகுதிகளை மூழ்கடித்துள்ள நிலையில், வீட்டுக்குள் வந்த கங்கைக்கு பல விதமான வரவேற்பு கிடைத்து வருகிறது.வீட்... மேலும் பார்க்க

அவதூறு வழக்கில் ராகுலுக்கு நிபந்தனை ஜாமீன்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக அவதூறு கருத்துகள் தெரிவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பார்க்க

இந்தியா இறந்த பொருளாதாரமா? டிரம்ப்பின் பொய்யான விமர்சனத்துக்கு அவரது நிறுவனமே சாட்சி!

இந்தியா மீதான வரிவிதிப்பு பிரச்னைகளுக்கிடையே, இந்தியாவை இறந்த பொருளாதாரம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்தார்.டிரம்ப்பின் இந்த விமர்சனம், இந்தியா மட்டுமின்றி உலக பொருளாதார நாடுகளிடை... மேலும் பார்க்க

உத்தரகண்ட் நிலச்சரிவில் 150 பேர் உயிருடன் மீட்பு, 11 ராணுவ வீரர்கள் மாயம்!

உத்தரகண்டின் உத்தரகாசியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 150 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 11 ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளனர் என தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரி ஒருவர் பு... மேலும் பார்க்க