டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ.87.73 ஆக நிறைவு!
மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி! இன்று முழுவதும் ஒத்திவைப்பு!
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நாளை ஒத்திவைக்கப்பட்டன.
ஜூலை 21 ஆம் தேதியில் தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்கக் கோரி, இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்த நிலையில், அதுதொடர்பான விவாதமும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி குறித்தும் விவாதிக்கக் கோரி, புதன்கிழமை காலையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனையடுத்து, பிற்பகல் 2 மணிவரையில் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இரு அவைகளும் பிற்பகல் 2 மணியளவில் தொடங்கிய போதிலும், மக்களவையில் எதிர்க்கட்சிகள் மீண்டும் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், நாடாளுமன்ற மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு, நாளை காலை மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டது.