Kingdom: "முற்றிலும் கற்பனையே" - இலங்கைத் தமிழர்கள் சித்தரிப்பு சர்ச்சை; வருத்தம...
Eng vs Ind: `எங்களுக்கு இடையே ட்ரம்ப் பேச்சு வார்த்தை நடத்தவில்லை' - வைரலாகும் வாசிம் ஜாஃபரின் பதிவு
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் பதிவிட்டிருக்கும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

வழக்கமாக இங்கிலாந்து - இந்தியா போட்டிகள் என்றாலே முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் இந்திய அணி குறித்து கருத்துகளைப் பதிவிடுவார். அவர்களுக்கு முன்னாள் இந்திய வீரர்களும் பதிலடி தருவார்கள்.
அப்படி மைக்கேல் வாஹனுக்கு பதிலடி தருவதில் இந்திய வீரர் வாசிம் ஜாஃபர் முன்னணியில் இருப்பார்.
இருவரும் அவ்வப்போது எக்ஸ் தளத்தில் வார்த்தை போரில் ஈடுபடுவது வழக்கம். அதேபோல இந்தத் தொடர் நடைபெற்றபோதும் இருவரும் வார்த்தை போரில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இருவருக்கும் நடைபெற்ற வார்த்தை போர் தொடர்பாக வாசிம் ஜாஃபர் பதிவிட்ட ட்வீட் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

வாசிம் ஜாஃபர் வெளியிட்டிருந்தப் பதிவில், "எனக்கும் மைக்கேல் வாஹனுக்கும் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்துவதாக வரும் டொனால்ட் ட்ரம்ப் பற்றிய செய்திகள் அடிப்படையற்றவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை.
எங்களின் சோசியல் மீடியா போர் தொடரும். எங்கள் உரையாடலுக்கு முடிவே இருக்காது. இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி." என்று ஜாஃபர் ட்வீட் செய்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
சமீப காலங்களாக போர் நிறுத்தம் பற்றி டிரம்ப் பேசி வரும் நிலையில் அதனை மையப்படுத்தி வாசிம் ஜாஃபர் இவ்வாறு ட்வீட் செய்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...