செய்திகள் :

Bihar: "என் அப்பாதான் ஆணவப்படுகொலை செய்தார்; என் மடியிலேயே உயிரைவிட்டான் என் காதலன்"-கதறி அழும் பெண்

post image

தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவெங்கும் தினமும் சாதிய ஆணவப்படுகொலைகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன.

நெல்லையில் கவின் ஆணவப்படுகொலை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 6) அதே நெல்லையில் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவர், தன் அக்காவுடன் பேசியதாகக் கூறி, தன் அக்காவுடன் பேசிய அந்த மாணவரை அவரது வீடு புகுந்து அரிவாளால் வெட்டியிருக்கிறார் அவரது தம்பி. இச்சம்பவத்தில் அந்த மாணவியின் தம்பி, அவருடன் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 10ம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

கவின் குமார்
கவின் குமார்

சா‘தீ’க்குள் தென்மாவட்டங்கள்... தொடரும் அரிவாள் அவமானங்கள்! - என்ன செய்கிறது அரசு?

பெரியவர்களிடம் விஷமாகப் பரவியிருக்கும் சாதிய எண்ணங்கள், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் வரை பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையையும் உடைக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவெங்கும் தினமும் ஆணவப்படுகொலைகள் நடந்த வண்ணமிருக்கின்றன.

இந்நிலையில் பீகாரில் காதலியின் கண்முன்னே, காதலனை ஆணவப்படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பிகாரில் டார்பாங்க மெடிக்கல் காலேஜில் நர்சிங் படித்து வரும் 25வயதான ராகுல் குமார் என்ற இளைஞரும், அதே கல்லூரியில் நர்சிங் படிக்கும் தன்னு என்ற பெண்ணும் நான்கு மாதங்களுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டிருக்கின்றனர்.

இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் இவர்களின் திருமணத்திற்குக் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. இந்த அழுத்தத்தினால் காதலைப் பிரித்துவிடுவார்கள் என்ற பயத்தில் இருவரும் படிக்கும்போதே திருமணம் செய்துகொண்டு, கல்லூரி விடுதியில் தங்கிப் படிப்பைத் தொடர்ந்திருக்கின்றனர்.

காதலி மடியிலேயே உயிரைவிட்ட காதலன்

இந்தச் சூழலில் திருமணமான நான்கு மாதங்களுக்குப் பிறகு 'சமாதா

னமாகிவிடலாம், உங்களை ஏற்றுக் கொள்கிறோம்' என ராகுலிடம் சாமர்த்தியமாகப் பேசிய அப்பெண்ணின் தந்தை பிரேம்சங்கர் ஜா, கல்லூரி விடுதிக்கு வெளியே ராகுலை வரவழைத்து தன் பெண்ணின் கண் முன்பே மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ராகுலின் மார்பிலேயே சுட்டுக் கொலை செய்திருக்கிறார்.

துப்பாக்கி சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த ராகுலின் நண்பர்கள், கல்லூரி மாணவர்கள் ஆணவப்படுகொலை செய்த பிரேம்சங்கரை அடித்து காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கின்றனர். காவல்துறையினர் பிரேம்சங்கர் மற்றும் அவருக்குத் துணையாக இருந்த அவரது மகன் ஆகியோரை கைது செய்திருக்கின்றனர்.

தன்னு, ராகுல்

`ஆணவக்கொலை தனிச்சட்டம், இடைநிலை சாதியினர் வாக்குகளை பாதிக்காது!’ - முதல்வரை சந்தித்த திருமாவளவன்

என் அப்பாதான் ஆணவப்படுகொலை செய்தார்

காதல் கணவரின் ஆணவப்படுகொலை குறித்து கண்ணீர்விட்டுக் கதறியபடி பேசியிருக்கும் தன்னு, "முகத்தை மறைத்துக் கொண்டு குல்லா அணிந்த டி சர்ட் போட்டுக் கொண்டு ஒருவர் ராகுலிடம் பேசிக் கொண்டிருந்தார். அருகில் உற்றுப் பார்த்தப் பின்புதான் அவர் என் தந்தை எனத் தெரிய வந்தது. ராகுலிடம் பேசிக் கொண்டிருந்த என் தந்தை, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ராகுலின் மார்ப்பிலேயே சுட்டார். சம்பவ இடத்திலேயே ராகுல் சரிந்து என் மடியிலேயே விழுந்தார். கொஞ்சம் கொஞ்சமாக உயிரைவிட்ட ராகுலை என் மடியில் வைத்து கதறி அழுதேன். என் மடியிலேயே, என் கண் முன்னே என் கணவர் ராகுல் உயிரைவிட்டார்.

என் கணவரை ஆணவப்படுகொலை செய்த என் அப்பா பிரேம்சங்கரையும், அதற்குக் காரணமான என் சகோதரரையும், என் குடும்பத்தினரையும் விட்டுவிடாதீர்கள். அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கவேண்டும். இனி இதுபோல யாருக்கும் நடக்காத வண்ணம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மிகுந்த அறச்சீற்றத்துடன் கூறியிருக்கிறார் உயிரிழந்த ராகுலின் காதல் மனைவி தன்னு.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

"Legal Opinion கேட்டிருக்கிறோம்; பார்ப்போம்!" - கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஸ்டாலின் சொன்னதென்ன?

ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசியலில் தொடர்ந்து வலுத்துவரும் சூழலில், தமிழக முதல்வரை சந்தித்திருக்கிறார்கள் தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள். இந்த திடீர் சந்தி... மேலும் பார்க்க

"இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிய ஒரே அரசு தமிழ்நாடு" - மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசுதான் என பெருமிதத்துடன் கூறியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதுகுறித்த அவரது எக்ஸ் தள பதி... மேலும் பார்க்க

NTK: `பனை, மாடு மேய்ச்சல், மரம், தண்ணீர், மலை மாநாடுகள்.!' - கைகொடுக்கிறதா சீமானின் புது ரூட்?

‘ஒரணியில் தமிழ்நாடு’, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என தி.மு.க, அ.தி.மு.க தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கும் சூழலில், மாடு மாநாடு, தண்ணீர் மாநாடு என புது வழி எடுக்கிறது நாம் தமிழர் கட்சி... மேலும் பார்க்க

50 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்த தபால் சேவை நிறுத்தம்; தபால் பெட்டிகளுக்கு விடைகொடுப்போம்!

டிஜிட்டல் யுகம் நாளுக்கு நாள் அசுர வளர்ச்சியடைந்து வரும் இந்த காலத்தில் எல்லாமே வேகம் அதிவேகம்தான். காத்திருப்பு என்ற வார்த்தைக்கூட பயன்பாட்டில்லை, கால வேகத்தில் காலாவதியாகிவிட்டது. இங்கிலாந்தில், லோங... மேலும் பார்க்க

``ரூ.22 கோடியில் கௌசிகா நதி புனரமைப்பு; 3000 ஏக்கர் விளைநிலம் பயன்பெறும்'' - தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்டம் நீர்வளத்துறை வைப்பாறு வடிநிலக்கோட்டத்தின் கீழ் ரூ.22 கோடி மதிப்பீட்டில் விருதுநகர் கெளசிகா நதியை புனரமைக்கும் நவீனமயமாக்கல் பணி மற்றும் வரத்துக்கால்வாய்களை தூர்வாரும் பணியை மாவட்ட ... மேலும் பார்க்க

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்து 50 ஆண்டுகளாக கிடைக்காத இழப்பீடு - போராட்டம் தீவிரம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக 1981-ம் ஆண்டு 960 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாகியும் தற்போது வரை நிலம் கொடுத்த மக்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. இதற்கு எதிராக ந... மேலும் பார்க்க