ரூ.27,804 சம்பளத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மைய அலுவலகத்தில் வேலை!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாகவுள்ள சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.27,804
வயது வரம்பு : 42-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எல்எல்பி முடித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் மற் றும் உரிமைகளுக்காக சேவையாற்றும் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tirupathur.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
மாவட்ட ஆட்சியர், மாவட்ட குழந்தைகள் பாதுபாப்பு அலகு, திருப்பத்தூர் மாவட்டம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 8.8.2025
மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.