இந்தியா மீதான வரியை 50 சதவிகிதமாக உயர்த்திய ட்ரம்ப்; இந்தியாவின் முதல் ரியாக்ஷன...
தொடர்ந்து 2-ம் நாளாக சரிவில் பங்குச் சந்தை!
நேற்று பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்த நிலையில் இன்றும்(புதன்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
80,694.98 புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.45 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 210.31 புள்ளிகள் குறைந்து 80,499.94 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி தற்போது 73.75 புள்ளிகள் குறைந்து 24,575.80 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
நிஃப்டி மிட்கேப் 100, நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடுகள் முறையே 0.87 சதவீதம் மற்றும் 1.1 சதவீதம் குறைந்து வர்த்தகமாகி வருகின்றனர்.
துறை ரீதியாக, நிஃப்டி ஐடி, பார்மா, ரியாலிட்டி ஆகியவை தலா 1 சதவீதத்திற்கும் மேலாக சரிந்தன. நிஃப்டி ஆட்டோ, எரிசக்தி, எஃப்எம்சிஜி, மெட்டல் ஆகியவையும் சரிவுடன் வர்த்தகமாகின்றன. அதேநேரத்தில் நிஃப்டி பேங்க் மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு லாபமடைந்து வருகின்றன.
சென்செக்ஸ் பங்குகளில், இன்ஃபோசிஸ், எடர்னல், டெக் மஹிந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ், எச்.சி.எல். ஆகியவை அதிக இழப்பைச் சந்தித்தன. டிரென்ட், ஏசியன் பெயிண்ட்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, பாரதி ஏர்டெல், பாரத் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டின.
அமெரிக்காவின் வரி விதிப்பு இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.