ரஷியாவுடன் வர்த்தகம்! இந்தியாவின் கேள்விக்கு டிரம்ப்பின் மழுப்பல் பதில்!
10 கோடி பார்வைகளைப் பெற்ற கனிமா!
ரெட்ரோ கனிமா பாடல் யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் ‘கனிமா..’ பாடல் படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று இந்தியளவில் வைரல் ஆனது.
இதனால், சமூகவலைதளங்களில் இந்தப் பாடலுக்கு பலரும் ரீல்ஸ் செய்தனர்.
தொடர்ந்து, ரெட்ரோ திரைப்படத்தில் சிங்கிள் ஷாட் காட்சியாக உருவாக்கப்பட்ட இப்பாடல் விடியோ வடிவிலும் ரசிகர்களை ஈர்த்தது.
முக்கியமாக, பூஜா ஹெக்டேவின் நடன அசைவுகள் பாடலுக்குப் பெரிய பலமாக அமைந்திருந்தன.
இந்த நிலையில், இப்பாடல் யூடியூபில் 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது. விவேக் எழுதிய இப்பாடலை இசையமைத்து பாடியிருந்தார் சந்தோஷ் நாராயணன்.
இதையும் படிக்க: கூலி இடைவேளைக் காட்சியை ரசிகர்களுடன் காண ஆவல்: லோகேஷ் கனகராஜ்