செய்திகள் :

அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் சின்னம்: கர்தவ்ய பவனை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி

post image

புது தில்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கர்தவ்ய பவன் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

நாட்டில் பல்வேறு துறைகளுக்கான அமைச்சகங்களுக்கான புதிய நிர்வாகக் கட்டடத்தைத் திறந்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இதன் மூலம், 60 முதல் 70 ஆண்டுகால கட்டடங்களிலிருந்து புதிய கட்டடங்களுக்கு அமைச்சகங்கள் மாறவிருக்கின்றன.

புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட கர்தவ்ய பவன், ஒவ்வொரு தனிநபருக்கும் சேவை செய்வதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியான முயற்சிகளின் அடையாளமாக விளங்குகிறது.

நாட்டின் அதிநவீன உள்கட்டமைப்பு மையத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை மக்களுக்கு விரைவாக வழங்க இது உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

புது தில்லியின் கர்தவ்ய பாதையில் உள்ள கர்தவ்ய பவன்-03 ஐ ஆய்வு செய்தது குறித்து பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும் "அதிநவீன" உள்கட்டமைப்பு குறித்து அவர் பெருமிதம் தெரிவித்திருந்தார்.

கர்தவ்ய பவன், நமது கொள்கைகள் மற்றும் திட்டங்களை மக்களுக்கு விரைவாக வழங்க உதவுவது மட்டுமல்லாமல், நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தையும் அளிக்கும். அதிநவீன உள்கட்டமைப்பின் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கட்டடத்தை தேசத்திற்கு அர்ப்பணிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

இந்த அமைச்சக அலுவலகங்கள் 1.5 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் இரண்டு பக்கங்களிலும் தரை தளம் மற்றும் ஆறு மாடிகளைக் கொண்ட கட்டடங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடங்களில் மத்திய உள்விவகாரத் துறை, வெளி விவகாரத் துறை, ஊரக மேம்பாட்டுத் துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை உள்ளிட்டவை இடம்பெறவிருக்கின்றன.

உத்தரகாசி பேரிடர்! மாயமான கேரள சுற்றுலாக் குழு கண்டுபிடிப்பு!

உத்தரகண்ட் மேகவெடிப்பைத் தொடர்ந்த பேரிடரில் மாயமானதாகக் கருதப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த 28 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பைத் தொடர... மேலும் பார்க்க

சட்டை படம்தான் குறியீடு; யாரென்றே தெரியாது!போதைப்பொருள் கும்பலின் அதிர்ச்சிப் பின்னணி!!

மெபெட்ரோன் எனப்படும் போதைப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையைக் கண்டுபிடித்த மும்பை காவல்துறையினர், சட்டைகளின் படங்களை அவர்கள் குறியீடாகப் பயன்படுத்தி வந்ததைக் கண்டறிந்துள்ளனர்.மைசூரில் உள்ள தொழிற்சாலை ... மேலும் பார்க்க

ஒரே மாதத்தில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை!

ஒடிஸாவில் ஆண் நண்பர் ஒருவரின் மிரட்டலால், மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒடிஸா மாநிலத்தின் படபடா கிராமத்தில் மூன்றாமாண்டு மாணவி ஒருவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக அவரது ... மேலும் பார்க்க

எல்லைப் பிரச்னைக்குப் பின் முதல்முறை! சீனா செல்கிறார் பிரதமர் மோடி?

2020-ம் ஆண்டு ஏற்பட்ட எல்லைப் பிரச்னைக்குப் பிறகு, முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி, சீனாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஆக.29 ஆம் தேதி மு... மேலும் பார்க்க

தில்லியில்.. 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர் வெளியேற்றம்!

தில்லியில், சட்டவிரோதமாக குடியேறிய 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர், தங்களது தாயகங்களுக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தில்லியின் துவாரகா பகுதியில், விசா உள்ளிட்ட உரிய ஆவணங்களின்றி ச... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு: பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடுப்போம்! - பாஜக

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வழக்கில் நீதிமன்றதிற்கு எதிராக கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடரப் போவதாக பாஜக கூறியுள்ளது.இந்திய - சீன எல்லையில் 2,000 சதுர கி... மேலும் பார்க்க