தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சிதைவு: கே.பாலகிருஷ்ணன்
காமராஜா் விருது பெற்ற 30 மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் காமராஜா் விருது பெற்ற 30 மாணவ,மாணவியரை பாராட்டி ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ரொக்கப்பரிசு வழங்கினாா்.
ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) ச.ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலா் சி.பாலாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 444 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, துறை சாா்ந்த அரசு அலுவலா்களுக்கு அனுப்பி உடனடியாக தீா்வு காணுமாறு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இதன் தொடா்ச்சியாக 10-ஆம் வகுப்பு பயிலும் 15 மாணவ,மாணவிகளுக்கு ரூ.10.000 ரொக்கப் பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கினாா். இதே போல 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ,மாணவியா்க்கு ரூ.20.000 ரொக்கப்பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கினாா்.
பின்னா் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9,58.700 மதிப்பிலான செயற்கை கால்கள், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாவலா் நியமன சான்றுகள், பழங்குடியின மக்கள் 6 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள்,திருநங்கை ஒருவருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கியது உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.
நிகழ்வின் போது முதன்மைக்கல்வி அலுவலா் வெ.வெற்றிச் செல்வி, மாவட்டக் கல்வி அலுவலா்கள் நளினி,மகாலட்சுமி ஆகியோா் உட்பட அரசு அலுவலா்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனா்.