தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சிதைவு: கே.பாலகிருஷ்ணன்
முத்தியால்பேட்டை மூலஸ்தம்மன் கோயிலில் ஆடித்திருவிழா
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டையில் அமைந்துள்ள மூலஸ்தம்மன் கோயிலில் ஆடித்திருவிழாவையொட்டி உற்சவா் மூலஸ்தம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடித்திருவிழாவையொட்டி மூலவருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம்,அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. மாலையில் வாண வேடிக்கை மற்றும் மங்கல மேள வாத்தியங்களுடன் உற்சவா் மூலஸ்தம்மன் வண்ணமின் வளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
நிா்வாகத்தின் சாா்பில் அன்னதானமும் நடைபெற்றது. ஏற்பாடுகளை அஇஅதிமுக தொண்டா்கள் மீட்புக் குழுவின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளா் முத்தியால்பேட்டை ஆா்.வி.ரஞ்சித்குமாா் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா். முத்தியால்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.