சரித்திரப் பதிவேடு குற்றவாளி மாநகர எல்லைக்குள் நுழைய ஓராண்டு தடை
சரித்திரப் பதிவேடு குற்றவாளி மாநகர எல்லைக்குள் நுழைய ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாநகரம், அனுப்பா்பாளையம் காவல் சரித்திர பதிவேடு குற்றவாளியான விக்னேஷ் (25) என்பவா், பொதுமக்களுக்கும், பொதுச் சுகாதாரத்துக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதைத் தடுக்கும் பொருட்டு அவா் மீது மாநகர காவல் சட்டத்தின்கீழ் மாநகர எல்லைக்குள்பட்ட பகுதிக்குள் நுழைவதற்கு ஓராண்டு தடை விதித்து மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன் ஆணை பிறப்பித்துள்ளாா்.