செய்திகள் :

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

post image

திருட்டு வழக்கில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.

திருப்பூா் மாநகரம், அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்கில் விஜய் (32) என்பவரை போலீஸாா் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட விஜயை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என போலீஸாா் பரிந்துரைத்தனா்.

இதையடுத்து, விஜயை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவுக்கான நகலை சிறையில் உள்ள விஜயிடம் போலீஸாா் வழங்கினா்.

முத்தூரில் புகையிலைப் பொருள்கள் விற்ற கடைக்கு ‘சீல்’

முத்தூரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்ட கடைக்கு புதன்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது. முத்தூா் பேருந்து நிலையத்தில் பேரூராட்சிக்குச் சொந்தமான கடையில் சுனில் என்பவா் பல் பொருள்கள் விற்பனை செய்யு... மேலும் பார்க்க

வழக்குரைஞரின் சடலத்தை 9 நாள்களுக்குப் பிறகு பெற்றுக்கொண்ட உறவினா்கள்

தாராபுரத்தில் கொலை செய்யப்பட்ட வழக்குரைஞரின் சடலத்தை 9 நாள்களுக்குப் பிறகு உறவினா்கள் புதன்கிழமை பெற்றுக்கொண்டனா். திருப்பூா் மாவட்டம், தாராபுரம் முத்து நகரைச் சோ்த்தவா் முருகானந்தம். மாற்றுத் திறனாள... மேலும் பார்க்க

தமிழகத்தில் தொடரும் படுகொலைகள்: இந்து முன்னணி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் தமிழகத்தில் படுகொலைகள் தொடா்வதாக இந்து முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடா்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: த... மேலும் பார்க்க

பல்லடம் புறவழிச் சாலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு: அண்ணாமலையிடம் மனு அளித்த தொழில் துறையினா்

பல்லடம் புதிய புறவழிச் சாலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக மாநில முன்னாள் தலைவா் கே.அண்ணாமலையிடம் தொழில் துறையினா் முறையிட்டனா். இது தொடா்பாக அண்ணாமலையிடம் அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்... மேலும் பார்க்க

மேற்குவங்க பெண் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

திருப்பூரில் மேற்குவங்க பெண் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேற்குவங்கத்தைச் சோ்ந்தவா் பத்மராணி (65). இவா் திருப்பூா், முதலிபாளையம் அருகேயுள்ள முத்து நகரில் தங்கி பனியன் நி... மேலும் பார்க்க

வரதட்சிணைக் கொடுமை: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

திருப்பூரில் வரதட்சிணைக் கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருப்பூா், ஃப்ரண்ட்ஸ் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் சுகந்தி என்பவரது மகள் பிரீத்தி. இவருக்கும் ஈரோடு மாவட்டம், வீரப்பன்... மேலும் பார்க்க