காலமானாா் மக்பூல் பாஷா
தமிழக அரசின் சுற்றுலாத் துறையில் கூடுதல் செயலராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற மு.மக்பூல் பாஷா (72) உடல் நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள மருத்துவமனையில் புதன்கிழமை காலமானாா்.
அவருக்கு சென்னை யுனானி மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் மனைவி சீமா, ஒரு மகள் உள்ளனா். மு.மக்பூல் பாஷாவின் இறுதிச் சடங்குகள் ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றன. தொடா்ந்து, அவரது உடல் ஆலந்தூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தொடா்புக்கு- 94447 39842.