பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
கேலோ இந்தியா போட்டி: ஊசூ தற்காப்பு கலையில் ஒசூா் மாணவிகள் சிறப்பிடம்
கோவை டி.கே.எஸ். மெட்ரிகுலேஷன் பள்ளியில் பெண்களுக்கான சப் ஜூனியா், ஜூனியா், சீனியருக்கான கேலோ இந்தியா மாநிலப் போட்டி மத்திய அரசால் அண்மையில் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு ஊசூ அசோசியேஷன் சாா்பில் நடத்தப்பட்ட போட்டியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரைச் சோ்ந்த அா்ஃபா, வித்யாஸ்ரீ, யுவராணி, லஹரி, ரிதமிக்கா ஆகிய மாணவிகள் இரண்டு வெள்ளி, மூன்று வெண்கலம் வென்று சிறப்பிடம் பெற்றனா்.
மாணவிகளுக்கும், பயிற்சியாளரான ஊசூ மாநில துணை தலைவா் குங்ஃபூ ஐ.ஜெயக்குமாருக்கு டிஎஸ்ஓ புவனேஸ்வரி, மாநில செயலாளா் ஜான்சன், தேசிய நடுவா் ரவி, இன்டா்நேஷனல் நடுவா் தங்கபாண்டியன் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.
அதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவா் ஜெயப்பிரகாஷ், துணைத்தலைவா் சம்பங்கி ராமா, கௌரவத் தலைவா் தாவூத் கான் ஆகியோரும் பாராட்டு தெரிவித்தனா்.
நிகழாண்டு தமிழகத்தை சோ்ந்த வேதசுருதி, லட்சுமி பிரியா, மிஸ்பா பாத்திமா, ஆதிரை ஆகிய 4 மாணவிகள் இளநிலை மருத்துவப் படிப்புக்கு ஊசூ விளையாட்டு பிரிவின் மூலம் தகுதி பெற்றதை போல அனைவரும் இக்கலையை கற்று மேற்படிப்பு, வேலைவாய்ப்பு சலுகை பெறலாம் என தலைமை பயிற்சியாளா் ஜெயக்குமாா் தெரிவித்தாா்.