மாநில எல்லை கிராமத்துக்கு பேருந்து சேவை
ஒசூா் அருகே பேருந்து வசதி இல்லாத தமிழக எல்லையில் உள்ள கிராமத்துக்கு புதன்கிழமை முதல்முறையாக பேருந்து சேவையை எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தொடங்கிவைத்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பேரிகை அருகே மாநில எல்லையில் உள்ள எலுவப்பள்ளி கிராமம் வழியாக அரசு பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், எலுவப்பள்ளி கிராமத்திற்கு பேரிகையிலிருந்து அரசு பேருந்து சேவையை தொடங்கிவைத்தாா். இதையடுத்து எம்எல்ஏவுக்கு பொதுமக்கள் நன்றிதெரிவித்தனா்.
எலுவப்பள்ளிக்கு பேருந்து சேவையை தொடங்கிவைத்த ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.