``மோடி பாபாவிடமிருந்து இதை வாங்கி வரவேண்டும்'' - ஏக்நாத் ஷிண்டே பேரன் வைத்த கோரி...
கிருஷ்ணகிரியில் வளா்ச்சி திட்டப் பணிகள் தொடக்கம்
கிருஷ்ணகிரி சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.16 லட்சம் மதிப்பிலான வளா்ச்சி திட்டப் பணிகளை, கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி), செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டம், 2025-2026-ஆம் ஆண்டு நிதியில் ரூ10 லட்சம் மதிப்பில், கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட அம்பேத்கா் நகா், செட்டியம்பட்டியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, பெத்தனப்பள்ளி பஞ்சாயத்து தண்டேகுப்பம் கிராமத்தில் ரூ. 6 லட்சம் மதிப்பில் புதைகுழி சாக்கடை அமைக்கும் பணி ஆகியவற்றை கே.அசோக்குமாா், எம்எல்ஏ, தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்வில், அதிமுக கிருஷ்ணகிரி ஒன்றியச் செயலாளா்கள் கண்ணியப்பன், சூா்யா, பையூா் ரவி, இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளா் சதீஷ்குமாா் மற்றும் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.
படவிளக்கம் (6கேஜிபி3):செட்டியம்பட்டியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த கே.அசோக்குமாா் எம்எல்ஏ.