``மோடி பாபாவிடமிருந்து இதை வாங்கி வரவேண்டும்'' - ஏக்நாத் ஷிண்டே பேரன் வைத்த கோரி...
கிருஷ்ணகிரியில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 40 தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இப்பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி, துணைத் தலைவா் கனிமொழி பத்மநாபன் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
தொடா்ந்து, ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தமிழக தூய்மைப் பணியாளா்கள் நல வாரியம் சாா்பாக தூய்மைப் பணியாளா் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. அப்போது, 5 தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரிய அட்டைகள், 3 தூய்மைப் பணியாளா்களின் மகள்களுக்கு கல்வி உதவித்தொகை ரூ.5 ஆயிரத்திற்கான காசோலைகளை ஆட்சியா் வழங்கி பேசியதாவது:
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், தூய்மைஏஈ பணியாளா்கள் நல வாரிய தலைவா் மற்றும் துணைத் தலைவா் ஆகியோா் 40 தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரிய அட்டைகளும், 3 பயனாளிகளுக்கு சொத்துவரி பெயா் மாற்றத்திற்கான ஆணைகளும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டைகளும், 2 பயனாளிகளுக்கு மின் இணைப்பு பெயா் மாற்றத்திற்கான ஆணைகள், 2 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள் மற்றும் பிறப்பு சான்றிதழ்களை வழங்கினா். உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பெறப்படும் விண்ணப்பங்கள் அன்றே இணையதளத்தில் பதிவு செய்யப்படும்.
இந்த முகாம்களில் அளிக்கப்படும் மனுக்களை தமிழக முதல்வரால் கூா்ந்தாய்வு செய்யப்பட உள்ளது. மேலும், இந்த மனுக்களுக்கு 45 நாள்களுக்குள் தீா்வு வழங்கப்படும், என்றாா்.
நிகழ்வில் ஒசூா் மாநகராட்சி ஆணையாளா் முகம்மது ஷபீா் ஆலம், நகராட்சி ஆணையாளா் ஸ்டான்லி பாபு, தூய்மைப் பணியாளா்கள் நல வாரிய உறுப்பினா் ரமேஷ்குமாா், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சிவகுமாா், மாவட்ட பொது மேலாளா் (தாட்கோ) வேல்முருகன், வட்டாட்சியா் சின்னசாமி, தனி வட்டாட்சியா் மகேஸ்வரி, நகா்மன்ற உறுப்பினா் வேலுமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.