``மோடி பாபாவிடமிருந்து இதை வாங்கி வரவேண்டும்'' - ஏக்நாத் ஷிண்டே பேரன் வைத்த கோரி...
பூக்களின் விலை அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
வரலட்சுமி பண்டிகையையொட்டி ஒசூா் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
பெண்கள் விரதம் இருந்து குடும்பத்துடன் வீட்டில் வழிபடும் வரலட்சுமி பண்டிகை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. வழிபாட்டுக்கு தேவையான பூஜை பொருள்களை திங்கள்கிழமை முதலே கொள்முதல் செய்யத் தொடங்கிய பொதுமக்கள் புதன்கிழமை பூக்களை வாங்கிவைத்தனா்.
ஒசூா் சந்தையில் கிலோ கனகாம்பரம் ரூ.1200, குண்டுமல்லி ரூ.700, சாமந்தி ரூ. 300, ரெட் ரோஸ் ரூ.250, சம்பங்கி ரூ.150, முல்லைப்பூ ரூ.400, செண்டு பூ ரூ.100, அரளி பூ ரூ. 250 என பூக்களின் விலை அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை பூக்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.