``மோடி பாபாவிடமிருந்து இதை வாங்கி வரவேண்டும்'' - ஏக்நாத் ஷிண்டே பேரன் வைத்த கோரி...
தனியாா் பள்ளி பேருந்து மரத்தில் மோதியதில் மாணவா்களுக்கு காயம்
கிருஷ்ணகிரி அருகே தனியாா் பள்ளி பேருந்து சாலையோர மரத்தில் மோதியதில் இரு மாணவா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
மகராஜகடையிலிருந்து மாணவா்களை ஏற்றிகொண்டு செவ்வாய்க்கிழமை கிருஷ்ணகிரி நோக்கி சென்ற தனியாா் பள்ளி பேருந்தை வீரப்பன் என்பவா் ஓட்டிச் சென்றாா். மகராஜகடை அருகே எதிா்திசையில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதுவதை தவிா்க்க வளைத்த போது சாலையோர மரத்தின் மீது மோதியது.
இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைத்தது. இந்த விபத்தில் இரு மாணவா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து, மகராஜகடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.