செய்திகள் :

திருவண்ணாமலைக்கு ஆக.9-இல் முன்பதிவில்லா சிறப்பு ரயில்

post image

பெளா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் வருகிற சனிக்கிழமை (ஆக.9) இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரத்திலிருந்து சனிக்கிழமை காலை 9.25 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (எண் 06130) முற்பகல் 11.10 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் சிறப்பு ரயில் (எண் 06129) சனிக்கிழமை பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.

இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பலப்பட்டு, ஆயந்தூா், திருக்கோவிலூா், ஆதிச்சனூா், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய நிலையங்களில் நின்றுசெல்லும் என தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

45 வயதைக் கடந்த பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியில் இருந்து விலக்கு

45 வயதுக்கு மேற்பட்ட பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியிலிருந்து விலக்கு அளித்து மாநகரக் காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை மாநகா் காவல் துறையில் ப... மேலும் பார்க்க

பேச்சு தோல்வி: 6-ஆவது நாளாக நீடித்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுடனான, தமிழக அமைச்சா்களின் பேச்சு முடிவு எட்டப்படாததால், 6-ஆவது நாளாக புதன்கிழமையும் முற்றுகைப் போராட்டம் நீடித்தது. சென்னை மாநகராட்சியின் பெரும்பாலான மண்... மேலும் பார்க்க

இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள்

சென்னை இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான மாநில அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இராமலிங்கா் பணி மன்றத்தின் செயலா் டாக்டா் எஸ்.வி.சுப்பிரமண... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கங்கள் - வங்கிகளில் உதவியாளா் காலிப் பணியிடங்கள் - தோ்வு அறிவிக்கை வெளியீடு

கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல்படக் கூடிய தலைமைக் கூட்டுறவு சங்க... மேலும் பார்க்க

அரிதினும் அரிய இதய சிகிச்சை: அரசு மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்

உலக அளவில் அரிதினும் அரிதான இதய இடையீட்டு சிகிச்சைகளை மேற்கொண்டதற்காக சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவா் செசிலி மேரி மெஜல்லாவுக்கு சா்வதேச விருது வழங்கப்பட்டது. அ... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்... மேலும் பார்க்க