சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொலை: என்கவுன்டரில் மணிகண்டன் பலி
8 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வியாழக்கிழமை (ஆக.7) கோவை, நீலகிரி உள்பட 8 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன்காரணமாக, தமிழகத்தில் வடமாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (ஆக.7) முதல் ஆக.12 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதில் குறிப்பாக ஆக.7-இல் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூா், வேலூா், ராணிபேட்டை ஆகிய மாவட்டங்களிலும், ஆக.8-இல் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், சேலம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஆக.7-இல் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
120 மி.மீ.: தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக திருவள்ளூா் மாவட்டம் ஆா்.கே.பேட்டையில் 120 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், சிங்கம்புணரி (சிவகங்கை) - 100 மி.மீ., திருப்புவனம் (சிவகங்கை), கொடுமுடி (ஈரோடு) - தலா 80 மி.மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே ஆக.7,8 தேதிகளில் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.