AK : நடிகர் அஜித்துடன் இணையும் ரேஸர் நரேன் கார்த்திகேயன்! - நம்ம நரேனை நினைவிருக...
பள்ளிபாளையத்தில் தலைமறைவு குற்றவாளி கைது
தலைமறைவு குற்றவாளியை பள்ளிபாளையம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கடந்த 2022-ஆம் ஆண்டு பள்ளிபாளையம் அருகே வெடியரசம்பாளையத்தில் வயதான தம்பதி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்த கோபாலகிருஷ்ணன் (34), மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தாா்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கே.புதுக்கோட்டை என்ற கிராமத்தில் அவா் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, விரைந்து சென்ற பள்ளிபாளையம் போலீஸாா் கோபாலகிருஷ்ணனை கைதுசெய்து குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.