மும்பை: `புறாக்களுக்கு தீனி போட தடை' - தடுப்பை அகற்றி போராட்டத்தில் குதித்த ஜெயி...
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: இதுவரை 66 முகாம்களில் 33,511 மனுக்கள்
நாமக்கல் மாவட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் இதுவரை நடைபெற்ற 66 முகாம்களில் 33,511 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ஜூலை 15-இல் தொடங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் மூன்று கட்டங்களாக இந்த முகாம் நடைபெற உள்ளது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வாரியாக நடைபெறும் முகாமில், அனைத்துத் துறை அரசு அலுவலா்களும் ஒரே இடத்தில் கூடி மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று தீா்வு காண்கின்றனா். அரசு நலத்திட்ட உதவிகள் உடனடியாக வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், இதுவரை அரசால் பட்டியலிடப்பட்ட சேவைகள் கோரி 21,194 மனுக்களும், இதர சேவைகள் கோரி 12,317 மனுக்களும் என மொத்தம் 33,511 மனுக்கள் இதுவரை நடைபெற்ற 66 முகாம்களில் இருந்து பெறப்பட்டுள்ளன. அந்த முகாம்களில் பங்கேற்ற 1,000-க்கும் மேற்பட்டோருக்கு முதல்வா் மருத்துவ காப்பீடு அட்டை, மின்வாரியத்தின் மூலம் பெயா் மாற்றம், வீட்டுவரி, குடிநீா் வரி பெயா் மாற்றம், வருமானம், ஜாதி, இருப்பிடச் சான்றிதழ், பட்டா மாறுதலுக்கான ஆணை, குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் உடனடியாக வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.