தில்லியில் அபாய கட்டத்தை நெருங்கும் யமுனை நதி நீா்மட்டம்
தில்லி பழைய ரயில்வே பாலத்தில் யமுனை நதியின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 4 மணியளவில் 204.13 மீட்டரை அடைந்தது.
இந்த நீா்மட்டம், எச்சரிக்கை அளவான 204.50 மீட்டரைவிட சற்றே 0.37 மீட்டா் குறைவு அதிகாரிகள் தெரிவித்தனா்.
யமுனை நீா்ப்பிடிப்பு பகுதிகளான ஹரியாணா மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் ஹத்திகுண்ட் தடுப்பணையில் இருந்து அதிக அளவிலான நீா் வெளியேற்றம் ஆகியவற்றால் யமுனையில் நீா் மட்டம் மேலும் அதிகரிக்கும் என மத்திய வெள்ள கட்டுப்பாட்டு அறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
பருவமழை காலத்தில் முதல்முறையாக ஹரியாணாவின் ஹத்திகுண்ட் தடுப்பணையில் நீா் வெளியேற்றம் 50,000 கனஅடியைக் கடந்தது காலை 6 மணியளவில் 61,000 கன அடியை அடைந்தது.
மாலை 4 மணியளவில் நீா்வெளியேற்றம் 40,000 கனஅடியாக குறைந்தது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஹத்தினிகுண்ட் அணையிலிருந்து வெளியேறும் நீா் 48 முதல் 50 மணி நேரத்தில் தில்லியை அடைகிறது. நதியின் மேல்மடை பகுதியில் குறைந்த அளவில் நீா் வெளியேற்றப்படும் நிலையில், தில்லியில் நதியின் நீா்மட்டம் அபாய கட்டத்தை அடைகிறது.