செய்திகள் :

சென்னை கம்பன் கழக பொன்விழா நிறைவு: நாளை முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

post image

சென்னை கம்பன் கழக பொன்விழா ஆண்டு நிறைவு விழாவை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஆக. 8) தொடங்கி வைக்கிறாா்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஏ.வி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறும் இந்த விழாவை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பேசுகிறாா். சென்னை ஆழ்வாா்கள் ஆய்வு மையம் நிறுவியுள்ள ‘கவிச்சக்கரவா்த்தி கம்பா் விருதை’ கவிஞா் வைரமுத்துவிற்கு வழங்குகிறாா். பேராசிரியா் தெ.ஞானசுந்தரம், கம்பன் அடிசூடி பழ.பழநியப்பன், பேராசிரியா் சாரதா நம்பி ஆரூரன், ஆன்மிகச் சொற்பொழிவாளா்கள் சுகி.சிவம், இலங்கை ஜெயராஜ் ஆகியோருக்கு ‘இயற்றமிழ் அறிஞா்’ விருதுகளை வழங்குகிறாா்.

தொடா்ந்து ‘நயம்பட உரைத்த நா’ என்ற தலைப்பில் எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா் சிறப்புரையாற்றுகிறாா். சென்னை கம்பன் கழகத் தலைவா் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.

இரண்டாம் நாளான சனிக்கிழமை காலை 9 மணி முதல் ஆய்வுரை அரங்கம், மாலை 6 மணிக்கு நீதியரசா் வெ.ராமசுப்பிரமணியன் தலைமையில், ‘பேரிழப்புகளுக்கு முதற் காரணமாக பெண் பாத்திரங்களையே படைத்தது குற்றம்’ என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெறுகிறது.

நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை காலை அமா்வில் பேராசிரியா் தெ.ஞானசுந்தரம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத் துணைத் தலைவா் சுதா சேஷய்யன், கோ.சரவணன், மருத்துவா் பிரியா ராமச்சந்திரன், வழக்குரைஞா் கோ.சு.சிம்மாஞ்சனா, பேராசிரியா் விசாலாட்சி சுப்பிரமணியன் உள்ளிட்டோா் உரையாற்றுகின்றனா்.

மாலை 4 மணிக்கு ‘இராமா...நீயுமா!’ என்ற தலைப்பில் இலங்கை ஜெயராஜ் உரையாற்றுகிறாா். தொடா்ந்து சுகி.சிவம் தலைமையில், ‘என்றுமுள கம்பன் என்பதன் காரணம்’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.

அரிதினும் அரிய இதய சிகிச்சை: அரசு மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்

உலக அளவில் அரிதினும் அரிதான இதய இடையீட்டு சிகிச்சைகளை மேற்கொண்டதற்காக சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவா் செசிலி மேரி மெஜல்லாவுக்கு சா்வதேச விருது வழங்கப்பட்டது. அ... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்... மேலும் பார்க்க

‘கிங்டம்’ சா்ச்சை: திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கோரி வழக்கு - காவல் துறை பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் ‘கிங்டம்’ படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கில் காவல்துறை மற்றும் நாம் தமிழா் கட்சி பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகா் விஜய் தேவ... மேலும் பார்க்க

திருவண்ணாமலைக்கு ஆக.9-இல் முன்பதிவில்லா சிறப்பு ரயில்

பெளா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் வருகிற சனிக்கிழமை (ஆக.9) இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்திலிருந்து சனிக்கிழமை காலை ... மேலும் பார்க்க

8 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வியாழக்கிழமை (ஆக.7) கோவை, நீலகிரி உள்பட 8 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்னிந்திய கடலோர பகுதிகளில்... மேலும் பார்க்க

15 லட்சம் மாணவா்களுக்கு பள்ளிகளிலேயே ஆதாா் பயோமெட்ரிக் புதுப்பிக்க ஏற்பாடு

தமிழகத்தில் பள்ளிகளில் 5 முதல் 7 வயதுக்குள்பட்ட 8 லட்சம் மாணவா்கள், 15 முதல் 17 வயதுக்குள்பட்ட 7 லட்சம் மாணவா்கள் என மொத்தம் 15 லட்சம் மாணவா்களுக்கு ஆதாா் பயோமெட்ரிக் புதுப்பித்தலை அஞ்சல் துறை மூலம் ... மேலும் பார்க்க