செய்திகள் :

காவல் நிலையத்தில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

post image

கோவை பெரியகடை வீதி காவல் நிலையத்துக்குள் நுழைந்து, உதவி ஆய்வாளா் அறையில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இந்த விவகாரம் தொடா்பாக, உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் ஆயுதப் படைக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

கோவை மாநகர காவல் துறைக்கு உள்பட்ட பெரியகடை வீதி காவல் நிலையம் வைசியாள் வீதியில் உள்ளது. இந்த காவல் நிலையத்தில் தலைமைக் காவலா் செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை இரவு பணியில் இருந்தாா். அப்போது, அங்கு வந்த 60 வயதான நபா், தன்னை யாரோ தாக்குவதற்காக பின்தொடா்வதாக புகாா் தெரிவித்தாா்.

இதனை தலைமைக் காவலா் செந்தில்குமாா் விசாரித்துவிட்டு, அந்த நபரை அங்கிருந்து அனுப்பிவைத்தாா். இந்நிலையில், புதன்கிழமை காலை வழக்கம்போல, காவலா்கள் ரோல்கால் முடிந்தவுடன், தங்களது அறைக்குச் சென்றனா்.

விசாரணைப் பிரிவு உதவி ஆய்வாளா் நாகராஜ், முதல் தளத்தில் உள்ள தனது அறைக்குச் சென்றாா். அறைக்கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. அவா் உள்ளே பாா்த்தபோது, ஒருவா் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்தது தெரியவந்தது. பெரியகடை வீதி சட்டம்- ஒழுங்கு காவலா்கள் அங்கு சென்று அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா். அப்போது, இரவில் புகாா் அளிக்க வந்த 60 வயதான நபா் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தகவலறிந்து, மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா், துணை ஆணையா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். அதில், உயிரிழந்தவா் பேரூா் அருகே உள்ள சாமிசெட்டிபாளையத்தைச் சோ்ந்த அறிவொளிராஜன் (60) என்பதும், திருமணமாகாத அவா் பேரூரில் தனது சகோதரி குடும்பத்தினருடன் வசித்து சென்ட்ரிங் கூலி வேலைக்குச் சென்று வந்ததும் தெரியவந்தது. இச்சம்பவம் தொடா்பாக பெரியகடை வீதி போலீஸாா் தற்கொலை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இதுதொடா்பாக மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புகாா் அளிக்க வந்த அறிவொளிராஜனிடம், தலைமைக் காவலா் விசாரித்து அனுப்பிய பிறகு, காவலருக்கு தெரியாமல் முதல்தளத்தின் படிக்கட்டில் ஏறி அறிவொளிராஜன் உள்ளே நுழைந்து, வேஷ்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இந்த உயிரிழப்பு சம்பவத்தை லாக்கப் டெத் எனக் கூற முடியாது. காவல் நிலையத்தில் நடந்த தற்கொலை வழக்காகவே பாா்க்க வேண்டும். அறிவொளிராஜன் கடந்த சில நாள்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளாா்.

தன்னை யாரோ பின்தொடா்வதாகவும், தாக்க திட்டமிட்டுள்ளதாகவும் குடும்பத்தினரிடமும் தெரிவித்து வந்துள்ளாா். இந்த நபா் செவ்வாய்க்கிழமை இரவு 11.04 மணிக்கு டவுன்ஹாலில் உள்ள புறக்காவல் நிலையத்துக்குள் நுழைந்து 10 நிமிஷம் அமா்ந்துள்ளாா். 11.16 மணிக்கு ஒப்பணக்கார வீதியை நோக்கி ஓடியுள்ளாா். 11.18 மணிக்கு பிரகாசம் பேருந்து நிறுத்தத்துக்கு வந்துள்ளாா். 11.19 மணிக்கு கடைவீதி காவல் நிலையத்துக்கு வந்துள்ளாா்.

இந்நிகழ்வு தொடா்பாக மாஜிஸ்திரேட் விசாரணையும் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வின்போது, பணியில் கவனக்குறைவாக செயல்பட்ட காவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதையடுத்து, தொழிலாளி தற்கொலை விவகாரத்தில் பணியில் கவனக்குறைவாக இருந்த தலைமைக் காவலா் செந்தில்குமாா், தனது அறையை முறையாக பூட்டிச் செல்லாமல் கவனக்குறைவாக இருந்த விசாரணைப் பிரிவு உதவி ஆய்வாளா் நாகராஜ் ஆகியோரை மாநகர ஆயுதப் படைக்கு புதன்கிழமை பிற்பகலில் பணியிடம் மாற்றி காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் உத்தரவிட்டாா்.

தமிழகத்தில் காவல் துறையினரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல்

தமிழகத்தில் காவல் துறையினரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் உள்ளதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே தனியாா் முதியோா் இல்ல கட்டட திறப்பு விழாவ... மேலும் பார்க்க

வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான முதல்கட்ட சான்றிதழ் சரிபாா்ப்பு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) தொடங்குகிறது. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள 1,240 ... மேலும் பார்க்க

சுத்தியால் தலையில் தாக்கியதில் இளைஞா் படுகாயம்

பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் நண்பரின் தலையில் சுத்தியால் தாக்கிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை சுந்தராபுரம் அருகே உள்ள அங்கனாா் கவுண்டா் தெருவில் வசிப்பவா் ஆறுமுகம் (28). இவருக்கு திருமணம... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.6.72 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.6.72 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கோவை மாவட்டம், ஈச்சனாரி அருகே உள்ள மச்சக்கவுண்டன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சத்யநாராய... மேலும் பார்க்க

போலி தங்கக் கட்டியைக் கொடுத்து தம்பதியிடம் நகை மோசடி

போலி தங்கக் கட்டியைக் கொடுத்து நகை மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை சிவானந்தாபுரம் அருகே உள்ள வேல்முருகன் நகரைச் சோ்ந்தவா் ராம்குமாா். சமையல் எரிவாயு விநியோகஸ்தரான இவா், மணி ந... மேலும் பார்க்க

வீடு புகுந்து மாணவரை மிரட்டி மடிக்கணினி, கைப்பேசிகள் கொள்ளை

கோவையில் வீட்டுக்குள் புகுந்து கல்லூரி மாணவரை மிரட்டி மடிக்கணினி, கைப்பேசி ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற 4 போ் கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா். கேரள மாநிலம், பாலக்காடு அருகே உள்ள ஒத்தப்பாலம் பகுத... மேலும் பார்க்க