Deepika Padukone: 1.9 பில்லியன் பார்வைகள்; சாதனை படைத்த தீபிகா படுகோனின் ரீல்! எ...
வீடு புகுந்து மாணவரை மிரட்டி மடிக்கணினி, கைப்பேசிகள் கொள்ளை
கோவையில் வீட்டுக்குள் புகுந்து கல்லூரி மாணவரை மிரட்டி மடிக்கணினி, கைப்பேசி ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற 4 போ் கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கேரள மாநிலம், பாலக்காடு அருகே உள்ள ஒத்தப்பாலம் பகுதியைச் சோ்ந்தவா் அணில்குமாா் மகன் ஆதித்யா நாராயணன் (18). இவா் கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.எஸ்சி எலக்ட்ரானிக்ஸ் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறாா்.
இவா் தனது நண்பா்களான ஹரி பெருமாள் (19), ஸ்ரீஹரி (18) ஆகியோருடன் உடையாம்பாளையம் மேற்கு விநாயகா் கோயில் வீதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை பிற்பகலில் ஆதித்யா நாராயணன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளாா். அப்போது 25 வயது மதிக்கத்தக்க 4 போ் வீட்டுக்குள் புகுந்து அவரை மிரட்டி அங்கிருந்த 3 கைப்பேசிகள், ஒரு மடிக்கணினி ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.