செய்திகள் :

தமிழக எம்.பி. சுதாவின் தங்கச் செயின் மீட்பு! திருடன் கைது!

post image

தில்லியில் நடைபயிற்சியின்போது மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி.சுதாவின் தங்கச் செயினை பறித்துச் சென்றவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், எம்.பி.யிடம் பறிக்கப்பட்ட செயினும் மீட்கப்பட்டதாக தில்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா அதில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், தமிழ்நாடு இல்லத்தில் இருந்து ஆகஸ்ட் 4 ஆம் தேதி காலை அவர் நடைபயிற்சி சென்றிருக்கிறார்.

அப்போது ஹெல்மெட்டுடன் ஸ்கூட்டியில் வந்த அடையாளம் தெரியாத நபர் சுதாவின் 4.5 சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்றுள்ளார்.

இதில் லேசான காயமடைந்த சுதா, சாணக்கியபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் அனுப்பினார்.

இந்த நிலையில், செயின் பறிப்பில் ஈடுபட்டவரை கைது செய்த காவல்துறையினர், எம்பியின் செயினை மீட்டுள்ளனர்.

Police have arrested a man who snatched the gold chain of Mayiladuthurai Congress MP Sudha while she was out for a walk in Delhi.

இதையும் படிக்க : திருப்பூர் அருகே அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் எஸ்.ஐ. வெட்டிக் கொலை!

திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான்!

முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான் அதிமுகவில் இருந்து விலகி, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்துள்ளார்.இது குறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:முத... மேலும் பார்க்க

திருப்பூர் எஸ்எஸ்ஐ கொலை, கோவை காவல் நிலையத்தில் தற்கொலை! திமுக அரசுக்கு இபிஎஸ் கேள்வி

திருப்பூர் அருகே காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் கோவையில் காவல் நிலையத்தில் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்தும் திமுக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர்... மேலும் பார்க்க

அரசு திட்டங்களில் முதல்வர் பெயரை பயன்படுத்தலாம்! சி.வி. சண்முகத்துக்கு அபராதம் - உச்ச நீதிமன்றம்

புது தில்லி: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும், அரசு திட்டங்களில் தலைவர்களின் பெயர்கள் மற்றும் படங்களைப் பயன்படுத்தத் தடை... மேலும் பார்க்க

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19% எட்டியுள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

மத்திய அரசின் தரவுகள் வாயிலாகத் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதத்தை எட்டியிருப்பதைத் தெரியவந்திருப்பதாகத் தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ... மேலும் பார்க்க

ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு: அமலாக்கத் துறைக்கு ரூ. 30,000 அபராதம்!

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்தரன் தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அபாரதம் விதித்துள்ளது.சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத... மேலும் பார்க்க

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 17 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து! - உயர்நீதிமன்றம்

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 17 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில... மேலும் பார்க்க