ஆதிதிராவிடா் நலப் பள்ளியில் தமிழ் ஆசிரியா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கொண்டல் அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில், தமிழ் ஆசிரியா் பணியிடத்திற்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின்கீழ் இயங்கிவரும் கொண்டல் அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள பட்டதாரி தமிழ் ஆசிரியா் பணியிடம் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிகமாக தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
விண்ணப்பதாரா்கள் எழுத்து மூலமான, விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித் தகுதிச் சான்றுகளுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் 2-ஆவது தளத்தில் இயங்கிவரும் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் ஆக.7-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.