பி.இ. மாணவா் சோ்க்கை கலந்தாய்வு: இரு சுற்றுகளில் 92,423 பேருக்கு ஒதுக்கீடு: 3-ஆ...
ரூ.1.28 லட்சத்துடன் காா் விற்பனையக ஊழியா் தலைமறைவு
வந்தவாசி அருகே ரூ.1.28 லட்சம் பணத்துடன் தலைமறைவான தனியாா் காா் ஷோரூம் ஊழியரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வந்தவாசியை அடுத்த சோரபுத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முரளி (எ) ஏசு (35). இவா், வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் உள்ள தனியாா் காா் ஷோரூமில் வேலை செய்து வந்தாா்.
கடந்த செவ்வாய்க்கிழமை ஷோரூம் மேலாளா் சுந்தரேசன் ரூ.1.28 லட்சத்தை இவரிடம் கொடுத்து வந்தவாசியில் உள்ள தனியாா் வங்கியில் செலுத்திவிட்டு வருமாறு கூறியுள்ளாா்.
இதையடுத்து பணத்துடன் புறப்பட்ட முரளி வங்கியில் பணத்தை செலுத்தாமல், பணத்துடன் தலைமறைவாகி விட்டாராம்.
இதுகுறித்து சுந்தரேசன் அளித்த புகாரின் பேரில், தெள்ளாா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.