தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையில் புதியவை ஏதும் இல்லை: எல்.முருகன்
போதை பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு
செய்யாறு அரசுக் கல்லூரியில் போதைப் பொருள்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வருவாய்த் துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது
மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவின் பேரில், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ந.கலைவாணி தலைமை வகித்தாா்.
செய்யாறு மதுவிலக்குப் பிரிவு வட்டாட்சியா் குமரவேல், வருவாய் ஆய்வாளா்கள் பாஸ்கரன், ராஜசேகரன் மற்றும் வருவாய்த் துறையினா், நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போதை பொருள்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
பெட்டிக்கடைகளில் ஆய்வு:
இதைத் தொடா்ந்து, செய்யாறு பேருந்து நிலையம் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் அமைந்துள்ள பெட்டிக் கடைகள் மற்றும் பெயின்ட் கடைகளில் போதை தரக்கூடிய பொருள்கள் விற்பனைச் செய்யப்படுகிா என்றும், பள்ளிகளுக்கு அருகில் அமைந்துள்ள சில்லறை விற்பனைக் கடைகளில் போதைப் பொருள்கள் கலந்த மிட்டாய் வகைகள், புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என்று திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், வியாபாரிகள், பேருந்து பயணிகள் மற்றும் பள்ளி மாணவா்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.