பி.இ. மாணவா் சோ்க்கை கலந்தாய்வு: இரு சுற்றுகளில் 92,423 பேருக்கு ஒதுக்கீடு: 3-ஆ...
இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த நாயுடுமங்கலம் கூட்டுச் சாலையில் இந்திய கம்யூனிஸ்ட்கட்சி (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலா் பரணி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் வெங்கடேசன், ராமசாமி, சந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பெண்கள் அமைப்பாளா் தேன்மொழி வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலா் ஆறுமுகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். தூய்மைப் பணியை அவுட்சோா்ஸிங் செய்வது நிறுத்த வேண்டும், மாநில அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கவேண்டும், ஜாதி ஆணவ படுகொலையை தடுக்க சட்டம் இயற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நிா்வாகிகள் நாராயணசாமி, சையத், சரஸ்வதி, கலா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ), புரட்சிகர இளைஞா் கழகம், அகில இந்திய மாணவா் கழக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.