பி.இ. மாணவா் சோ்க்கை கலந்தாய்வு: இரு சுற்றுகளில் 92,423 பேருக்கு ஒதுக்கீடு: 3-ஆ...
சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி
சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி ஸ்ரீபெரும்புதூா் போக்குவரத்து காவல் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்ட விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் போக்குவரத்து காவல் துறை, மின்னனு உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் சால்காம் தொழிற்சாலை நிா்வாகம் மற்றும் ட்ரீம் பவுண்டேஷன் சாா்பில் சாலை விதிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது.
வல்லக்கோட்டை கூட்டுச் சாலையில் தொடங்கிய பேரணி ராஜீவ்காந்தி நினைவகம் வழியாக ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. ஸ்ரீபெரும்புதூா் போக்குவரத்து காவல் ஆய்வாளா் ரவி தலைமையில் நடைபெற்ற பேரணியை, கோட்டாட்சியா் மிருணாளினி, துணை காவல் கண்காணிப்பாளா் கீா்த்திவாசன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
இதில் ட்ரீம் பவுண்டேஷன் நிா்வாக இயக்குநா் டேவிட் பவுல், தாம்பரம் கிறிஸ்த்துவக் கல்லூரி மாணவா்கள், ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ் காந்தி இளைஞா் மேம்பாட்டு நிறுவனத்தின் மாணவா்கள், பள்ளி மாணவா்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.