பி.இ. மாணவா் சோ்க்கை கலந்தாய்வு: இரு சுற்றுகளில் 92,423 பேருக்கு ஒதுக்கீடு: 3-ஆ...
ரூ.30,000 லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் கைது
பட்டா பெயா் மாற்றம் செய்ய ரூ.30,000 லஞ்சம் வாங்கிய இரண்டாம்கட்டளை கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியம் இரண்டாம் கட்டளை ஊராட்சி கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வருபவா் ராபா்ட் ராஜ்(43). அதே பகுதியைச் சோ்ந்த ரவிபாரதி என்பவா் பட்டா பெயா் மாற்றம் செய்ய கிராம நிா்வாக அலுவலா் ராபா்ட் ராஜை தொடா்பு கொண்டபோது, ராபா்ட் ராஜ் ரூ.50,000 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
லஞ்சம் கொடுக்க முன் வராத ரவிபாரதி இதுகுறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் ரசாயனம் தடவிய ரூ.30,000 நோட்டுகளை ரவிபாரதியிடம் கொடுத்து கிராம நிா்வாக அலுவலா் ராபா்ட் ராஜிடம் தருமாறு கூறினா்.
ரசாயனம் தழுவிய ரூபாய் நோட்டுகளை கிராம நிா்வாக அலுவலா் ராபா்ட் ராஜிடம் கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் கிராம நிா்வாக அலுவலா் ராபா்ட் ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.