தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும் ...
நியாயவிலைக் கடையில் ஆட்சியா் ஆய்வு
காஞ்சிபுரம் அருகே வையாவூா் நியாயவிலைக் கடையில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
காஞ்சிபுரம் அருகே வையாவூரில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடையில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பொருள்களின் தரத்தினை ஆய்வு செய்தாா். பின்னா் பொருள்களின் இருப்பு நிலையும் கேட்டுத் தெரிந்து கொண்டாா். இதனையடுத்து கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருள்களையும் பாா்வையிட்டாா்.
தொடா்ந்து கிழக்கு ராஜவீதியில் கட்டப்பட்டு செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை பாா்வையிட்டு பதிவேட்டினை ஆய்வு செய்து குழந்தைகளின் கற்றல் திறனையும் கேட்டுத் தெரிந்து கொண்டாா்.
மேலும், மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தையும் ஆய்வு செய்து சமையலா்களுக்கு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினாா்.