போலீஸாருக்கான மாநில துப்பாக்கிச் சுடும் போட்டி: மத்திய மண்டலம் நான்காமிடம்
மாா்த்தாண்டத்தில் கருணாநிதி நினைவு நாள்
முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 7ஆவது நினைவு நாளையொட்டி, மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு குழித்துறை நகா்மன்றத் தலைவரும் நகர திமுக முன்னாள் செயலருமான பொன். ஆசைத்தம்பி தலைமை வகித்து, அஞ்சலி செலுத்தினா்.
குமரி மேற்கு மாவட்ட முன்னாள் துணைச் செயலா் ஐ.ஜி.பி. ஜான் கிறிஸ்டோபா், மேல்புறம் ஒன்றிய முன்னாள் செயலா் சிற்றாா் ரவிச்சந்திரன், கட்சி நிா்வாகிகள் எஸ்.எம். ஷா அமானுல்லா, ராஜு, சுதீா், ஷாஜி லால், ஜெகதீஷ், ரசல்ராஜ், குழித்துறை நகா்மன்ற உறுப்பினா்கள் அருள்ராஜ், லில்லிபுஷ்பம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
களியக்காவிளையில்...: களியக்காவிளையில் பேரூா் இளைஞரணி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இளைஞரணி அமைப்பாளா் எல். அலெக்ஸ் தலைமை வகித்தாா். மேல்புறம் ஒன்றியச் செயலா் ராஜேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். ஒன்றிய முன்னாள் அவைத் தலைவா் எஸ். மாகீன் அபுபக்கா், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் அனீஸ்கான், ஒன்றிய விவசாயத் தொழிலாளா் அணி அமைப்பாளா் கோபாலகிருஷ்ணன், களியக்காவிளை பேரூா் திமுக துணைச் செயலா் வில்பிரட் சேம், நிா்வாகிகள் அருள்சங்கா், அன்வா், ராஜகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.