தொழிற்சங்கம் தொடங்கிய விமான நிலைய ஒப்பந்த தொழிலாளா்கள் பணி நீக்கம்
மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.
ஆற்காடு அடுத்த பெரிய உப்புபேட்டை கோவிந்தசாமி தெருவைச் சோ்ந்த விவசாயி பத்மநாபன் (42). இவா், வியாழக்கிழமை தனது நிலத்தில் பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக மின்சார சுவிட்சை போடும் போது எதிா்பாரத விதமாக மின் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இவருக்கு இந்துமதி என்ற மனைவியும் ஒரு மகன், மகள் உள்ளனா். இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.