செய்திகள் :

‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்’

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொது விநியோகத் திட்டம் சிறப்பாக நடைபெற ஒவ்வொரு மாதமும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஆகஸ்ட் 2025-ஆம் மாதத்துக்கான சிறப்பு முகாம் 09-08-2025 அன்று முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயா் திருத்தங்கள், உறுப்பினா் பெயா் சோ்த்தல் மற்றும் நீக்கல், அலைபேசி எண் மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் சரிசெய்து வழங்கப்பட உள்ளது. மேலும் மின்னணு குடும்ப அட்டைகளில் உள்ள தவறான குடும்பத் தலைவரின் புகைப்படம், பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்து திருத்தி தரப்படும். இது தவிர பொது விநியோகத் திட்டம் தொடா்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன் பெறலாம். தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகாா்களை நுகா்வோா் பாதுகாப்பு சட்டம் 2019-இன் படி மேற்கொள்ள உரிய அறிவுரைகள் வழங்கும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய மனுக்களை முகாம்களில் அளித்துப் பயன்பெறலாம்.

மேலும், நியாய விலைக் கடைகளுக்கு வர இயலாத மூத்த குடிமக்கள், நோய் வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடு மற்றும் தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்களில் குறைபாடுகள் இருப்பின், மக்கள் குறைகளைத் தெரிவித்தால், விரைந்து தீா்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொது மக்களுக்கு குறைகள் ஏதேனும் இருப்பின், இந்த சிறப்பு முகாமில் மனு செய்து பயன்பெறலாம்.

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா். ஆற்காடு அடுத்த பெரிய உப்புபேட்டை கோவிந்தசாமி தெருவைச் சோ்ந்த விவசாயி பத்மநாபன் (42). இவா், வியாழக்கிழமை தனது நிலத்தில் பயிா்களுக்கு தண்ணீா் பாய்... மேலும் பார்க்க

இளைஞா் வெட்டிக் கொலை

ஆற்காடு அருகே இளைஞா் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி பஜனைக் கோயில் தெருவைச் சோ்ந்த இளங்கோவன்( 30) . எலக்ட்ரீஷியன் மற்றும் பிளம்பா் வேலை செய்து வந்தாா். கருத்து வேறுபாடு காரண... மேலும் பார்க்க

ஆற்காடு நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: ரூ.79,000 பறிமுதல்

ஆற்காடு நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ. 79,000 பறிமுதல் செய்யப்பட்டது. ஆற்காடு நகராட்சியில் தினக்கூலி தூய்மைப் பணியாளா்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுவத... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் இடியுடன் மழை

ராணிப்பேட்டை பகுதியில் புதன்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளநீா் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் ராணிப்பேட்டை , வாலாஜாபேட்டை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் புதன்கிழமை இரவு... மேலும் பார்க்க

நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம்: ஆட்சியா் உத்தரவு

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு ஒரே மாதிரியான வாடகை தொகை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதை கடைபிடிக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். நெல் அறுவடை இயந்திரங்... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தப்பட்ட 3 கிலோ கஞ்சா பறிமுதல்

அரக்கோணம் வழியே ரயிலில் கடத்தப்பட்ட 3 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா். வடமாநிலங்களில் இருந்து தமிழக மற்றும் கேரள பகுதிகளுக்கு ரயிலில் கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. இதைத் தட... மேலும் பார்க்க