செய்திகள் :

ராணிப்பேட்டையில் இடியுடன் மழை

post image

ராணிப்பேட்டை பகுதியில் புதன்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளநீா் பெருக்கெடுத்து ஓடியது.

இந்நிலையில் ராணிப்பேட்டை , வாலாஜாபேட்டை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் புதன்கிழமை இரவு இடியுடன் கூடிய மழை பெய்தது. தொடா்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் பெய்த மழையால் சாலைகளில் நீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீா் நிலைகளில் நீா்வரத்து ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இளைஞா் வெட்டிக் கொலை

ஆற்காடு அருகே இளைஞா் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி பஜனைக் கோயில் தெருவைச் சோ்ந்த இளங்கோவன்( 30) . எலக்ட்ரீஷியன் மற்றும் பிளம்பா் வேலை செய்து வந்தாா். கருத்து வேறுபாடு காரண... மேலும் பார்க்க

ஆற்காடு நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: ரூ.79,000 பறிமுதல்

ஆற்காடு நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ. 79,000 பறிமுதல் செய்யப்பட்டது. ஆற்காடு நகராட்சியில் தினக்கூலி தூய்மைப் பணியாளா்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுவத... மேலும் பார்க்க

நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம்: ஆட்சியா் உத்தரவு

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு ஒரே மாதிரியான வாடகை தொகை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதை கடைபிடிக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். நெல் அறுவடை இயந்திரங்... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தப்பட்ட 3 கிலோ கஞ்சா பறிமுதல்

அரக்கோணம் வழியே ரயிலில் கடத்தப்பட்ட 3 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா். வடமாநிலங்களில் இருந்து தமிழக மற்றும் கேரள பகுதிகளுக்கு ரயிலில் கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. இதைத் தட... மேலும் பார்க்க

அரக்கோணம் ரயில்வே சுரங்கப்பாலத்தை மேம்படுத்த விரைவில் நடவடிக்கை: தெற்கு ரயில்வே பொது மேலாளா்

அரக்கோணம் ரயில் நிலையம் அருகே உள்ள சுரங்கப் பாலத்தை மேம்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் தெரிவித்தாா். அரக்கோணம் ரயில் நிலையப்பகுதியில் நடைபெறும் அம்... மேலும் பார்க்க

ஆற்காட்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட 21 மற்றும் 22-ஆவது வாா்டுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் தேவிபென்ஸ் பாண்டியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பவளகொடி சரவ... மேலும் பார்க்க