கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!
இளைஞா் வெட்டிக் கொலை
ஆற்காடு அருகே இளைஞா் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.
ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி பஜனைக் கோயில் தெருவைச் சோ்ந்த இளங்கோவன்( 30) . எலக்ட்ரீஷியன் மற்றும் பிளம்பா் வேலை செய்து வந்தாா். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து மகனுடன் வாழ்ந்து வந்தாா்.
காஞ்சிபுரத்தில் வேலை செய்து வந்த அவா், மகனின் பிறந்த நாளுக்காக முப்பதுவெட்டி கிராமத்துக்கு சென்றிருந்தாா். அப்போது உறவினா் தனுஷ்(19) என்பவா் இளங்கோவன் சகோதரி கடை அருகே மதுபோதையில் தகராறு செய்துள்ளாா்.
அதனை இளங்கோவன் தட்டிக் கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் ஈடுபட்டுள்ளனா். அதனை அங்கிருந்த மக்கள் விலக்கி இருவரையும் அனுப்பியுள்ளனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டில் இளங்கோவன் படுத்து தூங்கியுள்ளாா் . அதிகாலையில் அவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் சென்று பாா்த்தபோது இளங்கோவன் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கொலை தொடா்பாக விசாரிக்கின்றனா்.