பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
ரயிலில் கடத்தப்பட்ட 3 கிலோ கஞ்சா பறிமுதல்
அரக்கோணம் வழியே ரயிலில் கடத்தப்பட்ட 3 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.
வடமாநிலங்களில் இருந்து தமிழக மற்றும் கேரள பகுதிகளுக்கு ரயிலில் கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. இதைத் தடுக்க மாநில காவல்துறையினா் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் ரயில்களில் சோதனை நடத்தி வருகின்றனா். ஜாா்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து அரக்கோணம் வழியே கேரள மாநிலம் எா்ணாகுளம் சென்ற அதிவிரைவு ரயிலில் புதன்கிழமை சோதனை நடத்திய அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் ரோஹித்குமாா் தலைமையிலான குழுவினா், அந்த ரயிலில் இருக்கைகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா காஞ்சிபுரம் மாவட்ட போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது (படம்).