பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
ஆற்காட்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட 21 மற்றும் 22-ஆவது வாா்டுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் தேவிபென்ஸ் பாண்டியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பவளகொடி சரவணன், நகா்மன்ற உறுப்பினா் குமரன் வி.விஜயகுமாா் முன்னிலை வகித்தனா். ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் கலந்து கொண்டு தீா்வு காணப்பட்டமனுக்களின் பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கினாா்.
இதில் நகராட்சி அதிகாரிகள், வருவாய்த் துறையினா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.